இங்கிலாந்தின் தலைசிறந்த கால்பந்து வீரரான வெய்ன் ரூனி மீண்டும் இங்கிலாந்து கழக அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2003 முதல் 2018 வரை 120 போட்டிகளில் விளையாடி 53 கோல்கள் அடித்துள்ள 33 வயதாகும் ரூனி தனது 16 வயதில் எவர்டன் அணிக்காக களம் இறங்கியிருந்தார்.
2004 வரை அந்த அணிக்காக விளையாடி அதன்பின் மன்செஸ்டர் யுனைடெட் கழக அணிக்புகு மாறிய அவர் 2004-ல் இருந்து 2017 வரை சுமார் 13 வருடங்கள் மன்செஸ்டர் அணிக்காக 393 போட்டிகளில் விளையாடி 183 கோல்கள் அடித்துள்ளார்.
பின்னர் தனது அறிமுக அணியான எவர்டனுக்கு திரும்பி அதன் பின்னர் அமெரிக்காவில் உள்ள டிசி யுனைடெட் அணியில் விளையாடுவதற்காக அமெரிக்கா சென்றிருந்தநிலையில் மீண்டும் டெர்பி கவுன்ட்டி அணியில் விளையாடுவதற்கு இங்கிலாந்து வரவுள்ளார். எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து டெர்பி அணியின் வீரராகவும், பயிற்சியாளராகவும் பணிபுரிவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #ரூனி #இங்கிலாந்து #விளையாட #ஒப்பந்தம்