நெருப்புடன் விளையாட வேண்டாம் என ஹொங்கொங் போராட்டக்காரர்களுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹொங்கொங் குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணை மேற்கொள்ளும் வகையில் கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்தது. இதற்கு எதிhப்;பு தெரிவித்தும் மசோதாவை முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தியும் அங்கு கடுமையான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்தப் போராட்டம் தற்போது வலுவடைந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் நடந்த முழு அடைப்பு போராட்டத்தினால் விமானம் உள்பட அனைத்து போக்குவரத்து சேவைகளையும் முடக்கியதுடன் போராட்டக்காரர்களில் சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் ஹொங்கொங்கை ஸ்தம்பிக்க வைத்த இந்த போராட்டத்தையடுத்து மத்திய அரசின் மகத்தான சக்தியை குறைத்து மதிப்பிட வேண்டாம் என ஹொங்கொங் போராட்டக்காரர்களுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. தீவிர எதிர்ப்பு போராட்டங்கள் ஹொங்கொங்கின் செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை கடுமையாக பாதித்து, அதை ஆபத்தான படுகுழியில் தள்ளிவிட்டுள்ளன.
போராட்டக்காரர்கள் நெருப்புடன் விளையாடுகிறார்கள். அப்படி செய்யாதீர்கள். அது உங்களுக்கு நல்லது அல்ல என சீனாவின் உயர்மட்ட கொள்கை அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் யாங் குவாங் தெரிவித்துள்ளார். நெருப்புடன் விளையாட வேண்டாம் – ஹொங்கொங் போராட்டக்காரர்களுக்கு சீனா எச்சரிக்கை #நெருப்புடன் #விளையாட #ஹொங்கொங் #போராட்டக்காரர்களுக்கு #சீனா #எச்சரிக்கை