மயூரப்பிரியன்..
உரும்பிராய் – கோப்பாய் வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள், டிப்பர் வாகனம் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று காலை உரும்பிராய் கிருஸ்ணன் கோவிலடியில் இடம்பெற்றது.
சம்பவத்தில் இயக்கச்சியைச் சேர்ந்த 22 வயதுடைய க.செந்தமிழ் என்பவரே உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. மோட்டார் சைக்கிள் (எம்டி90) ஒன்று சடுதியாக வீதியைக் கடந்த நிலையில் பிரதான வீதியில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிள் (பல்சர்) மோதி நிலைகுலைந்து டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு விபத்து இடம்பெற்றது என ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.