இலங்கை பிரதான செய்திகள்

ஐ.தே.க.வுக்கு ஆதரவு வழங்கியும், அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லையே – சித்தரிடம் கோத்தா…


போர் முடிந்த பின்னர் 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை விடுவித்ததாகவும், ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தும் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனைச் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  யாரும் கூறாமலேயே 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை விடுவித்ததாகவும் ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தும் எந்தவொரு அரசியல் கைதியையும் விடுவிக்க முடியவில்லைய என்று கோத்தாபய ராஜபக்ஸ நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம்  சித்தார்த்தனிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap