139
வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான நடனப் போட்டியானது மன்னார் நகரசபை மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை காலை இடம் பெற்றது. குறித்த நடனப் போட்டியில் மன்னார், யாழ்ப்பாணம் , வவுனியா முல்லைத்தீவு, கிளிநொச்சி, ஆகிய மாவட்டங்களில் இருந்து மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
குறித்த நிகழ்வில் குழு நடனப் போட்டியில் கிளிநொச்சி மாவட்டம் 1 ஆம் இடத்தையும் , யாழ் மாவட்டம் 2 ஆம் இடத்தையும் , மன்னார், வவுனியா மாவட்டங்கள் 3 ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டது. தனி நடனப் போட்டிகளும் நடைபெற்றது. தனி நடனப் போட்டிக்கான பெறுபேறுகள் மாவட்ட ரீதியாக பின்பு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட பிரதம கணக்காளர் , மன்னார் வலயக்கல்வி உதவிப்பணிப்பாளர், மாவட்ட சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , மத்திய சமூகசேவை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. வட மாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான நடனப் போட்டி #வடமாகாண #மாற்றுத்திறனாளி # நடனப்போட்டி #மன்னார்
– லம்பேர்ட்
Spread the love