ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக இந்தியா பிhத்துள்ள நடவடிக்கையால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான், டெல்லி மற்றும் லாகூருக்கிடையிலான பேருந்து சேவையையும் ரத்து செய்துள்ளது.
இந்தியாவின் இந்த அ நடவடிக்கைகளால் கடும் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் அரசு பல்வேறு பதிலடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் டெல்லியில் இருந்து லாகூர் செல்லும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் புகையிரதத்தினை பாகிஸ்தான் பகுதிக்குள் அனுமதிக்க மறுத்து நிறுத்தியதுடன் ஜோத்பூர்-கராச்சிக்டையேயான தார் எக்ஸ்பிரஸ் புகையிரதத்திறகும் அனுமதி மறுத்திருந்தது
இந்நிலையில், லாகூர்-டெல்லி இடையே நட்புரீதியில் இயக்கப்படும் பேருந்து சேவையையும் பாகிஸ்தான் ரத்து செய்துள்ளதாக பாகிஸ்தானின் தகவல் தொடர்பு அமைச்சர் முராத் சயீத் அறிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு பேரவை எடுத்த முடிவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
1999ல் முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பேருந்து சேவையானது இந்தியாவில் 2001ம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தாக்குதலுக்குப் பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர், 2003ல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #டெல்லி #லாகூர் #பேருந்து #பாகிஸ்தான் #ரத்து #ஜம்மு- காஷ்மீர்