பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என எதிர்பாக்கப்படுகின்ற கோத்தாபய ராஜபக்சவிற்கு ஆதரவளிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என கொழும்பு அரசியலில் பேசப்படுகின்றது.
பொதுஜனமுன்னணியுடன் இணைந்து கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் சுதந்திரக்கட்சி கோத்தாபய ராஜபக்சவுடன் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளார்.
கோத்தாபய ராஜபக்சவுடன் ஒரு உடன்படிக்கையிலும் பொதுஜனமுன்னணியுடன் மற்றுமொரு உடன்படிக்கையிலும் கைச்சாத்திடப்போவதாக சிறிசேன தெரிவித்துள்ளார். இதேவேளை மாகாணசபை தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதற்காக நீதிமன்றத்தின் ஆலோசனையை பெறுவதற்கான முயற்சிகளையும் சிறிசேன ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.