Home இலங்கைSLPPயின் தேசிய மாநாடும், கட்சித் தலைவர் – ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பும்…

SLPPயின் தேசிய மாநாடும், கட்சித் தலைவர் – ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பும்…

by admin

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாட்டிற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இன்று (11.08.19) மாலை 3 மணியளவில் சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இந்நிகழ்வு இடம்பெற உள்ளது.  இன்றைய மாநாட்டின் போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவம் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸவிற்கு வழங்கப்பட உள்ளது.  இதனையடுத்து மகிந்த ராஜபக்ஸவினால் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட உள்ளது.  இந்நிகழ்வின் அனைத்து தகவல்களும் நேரலையாக மாலை 3 மணி முதல் ரிவி தெரண ஊடாக ஔிபரப்ப அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More