சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான அமெரிக்க கோடீஸ்வரர் ஒருவர் மன்ஹாட்டன் சிறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அமெரிக்காவில் நிதி நிறுவன அதிபராகவும், கோடீஸ்வரருமாக இருந்தவர் ஜெப்ரி எப்ஸ்டீன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடந்த 2002-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரையான காலப்பகுதயில் இவர் மன்ஹாட்டன் மற்றும் புளோரிடாவில் உள்ள தனது பங்களாவில் பல சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக முறைப’பாடு செய்யப்பட்டதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் எப்ஸ்டீனை கடந்த மாதம் கைது செய்து, மன்ஹாட்டன் சிறையில் அடைத்திருந்தனர்.
இந்நிலையில், அவர் சிறை அறையிலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனவும் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2005இல் அவரால் பாதிக்கப்பட்டதாக 14 வயது சிறுமி ஒருவரின் குடும்பம் வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளியில் தெரியவந்திருந்தது குறிப்பிடத்தக்கது #சிறுமிகளை #பலாத்காரம் #அமெரிக்க #கோடீஸ்வரர் #,தற்கொலை
Add Comment