யாழ் இந்தியதுணைத் தூதரகம்
யாழ்ப்பாணம்
ஊடகஅறிக்கை
யாழ் இந்தியதுணைத் தூதரகம் இந்தியாவின் 73வது சுதந்திரதினத்தை இன்று (15.08.2019) கொடியேற்றத்துடன் வெகுவிமர்சையாகக் கொண்டாடியது. யாழ் இந்தியத் துணைத் தூதுவர்சங்கர் பாலச்சந்திரன் இந்தியகுடியரசுத் தலைவரின் உரையினைவாசித்தார். தூதரகஅலுவலர்கள் வடமாகாணத்தில் வசிக்கும் இந்தியபிரஜைகள் மற்றும் இந்தியவம்சாவழியினர் ஊடகவியலாளர்கள் எனபலரும்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
2. வரவேற்புநிகழ்வுமாலை 6.00 மணிக்கு Northgate Jetwing hotel ல் ஆரம்பிக்கப்பட்டது. முனைவர் பரிமள் அசோக் பட்கேமற்றும் குழுவினர் பரதநாட்டியஅளிக்கையைநிகழ்வில் வழங்கினர். வடமாகாணஅவைத்தலைவர் சீ.வீ.கேசிவஞானம் பிரதம விருந்தினராக பங்கேற்று துணைத் தூதுவர் பாலச்சந்திரனுடன் சேர்ந்து இயன்மொழி வாழ்த்தினை பரஸ்பரம் ஒருவருக்கொருவர் தெரிவித்தனர். வடமாகாணமுன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்னேஸ்வரன, பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சித்தார்த்தன், முக்கியஅரசியல் கட்சிகளின் தலைவர்கள், மாவட்டஅரசாங்க அதிபர்கள், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள்,வடமாகாணசபையின் பிரதமசெயலாளர் பத்திநாதன்,ஆளுனரின் செயலாளர் சத்தியசீலன், கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன், மற்றும் மூத்த அதிகாரிகள், இந்தியபிரஜைகள் மற்றும் இந்தியவம்சாவழியினர்,ஊடகவியலாளர்கள் 150ற்கும் மேற்பட்டபலரும் கலந்துகொண்டனர்.