தமிழகத்தின் மிகப் பெரிய மாவட்டங்களில் ஒன்றான வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இந்தியாவின் 73-வது சுதந்திர தினம் கொண்டப்பட்ட நிலையில் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இதனை அறிவித்துள்ளார்.
இதனால், மாநிலத்தில் புதிதாக இரண்டு மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ள நிலையில் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 37-ஆக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
அதன்படி நிர்வாக வசதிக்காக, வேலூரை தலைமையிடமாகக் கொண்ட ஒரு மாவட்டமும், திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்ட ஒரு புதிய மாவட்டமும், ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டமும் தோற்றுவிக்கப்படும்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்வைத்தினான்குப்பம் எனப்படும் கே.வி.குப்பத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய தாலுகா ஏற்படுத்தப்படும் எனவும் முதல்வர் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது #வேலூர் #மூன்றாக #எடப்பாடி #சுதந்திரதினம்