யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட ஒரு பகுதி காணியை விடுவிப்பதற்கு 1200 மில்லியன் ரூபா தேவை எனவும் அதனை அரசாங்கம் கொடுக்கவில்லை எனவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றையதினம் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போதே இராணுவத்தினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
பலாலி வீதியின் கிழக்கு புறமாக உள்ள மிக வளமான விவசாய நிலங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதை சுட்டிக்காட்டிய நாடாளுளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறித்த காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என வலியுறுத்தியிருந்தார்
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராஜாவும் அதனை வலியுறுத்தியுள்ளதுடன், வல்லை அராலி வீதி மற்றும் மயிலிட்டியில் 3 கிராமசேவகர் பிரிவுகள் தொடா்ந்தும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் இந்த நடவடிக்கை பொருளாதார மேம்பாட்டுக்கு பாரிய தடையாக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த யாழ்.மாவட்ட இராணுவ தளபதி மேற்படி காணிகளை விடுவிப்பதற்கு 1200 மில்லியன் ரூபாய் நிதியை அரசாங்கத்திடம் கோாியிருந்ததாகவும் எனினும் அந்த நிதியை அரசாங்கம் தரவில்லை எனவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது #வலிவடக்கு #உயர்பாதுகாப்பு வலய #காணி, #இராணுவத்தினர்