கேரளாவில் கன்னியாஸ்திரி ஒருவர் தன்னை சபையில் இருந்து வெளியேற்றும் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான வத்திகானில் மேல்முறையீடு செய்துள்ளார்.
கேரளாவில் பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையில் கன்னியாஸ்திரியாக இருந்து வந்தவர் லூசி கலப்புரா என்பவரே இவ்வாறு மேல்முறையீடு செய்துள்ளார். இந்த நிலையில், இவர் கவிதைகள் எழுதி வெளியிடுகிறார்; ,கார் வாங்கி உள்ளார், சபை விதிமுறைகளை மீறி வாழ்கிறார் என பல குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.
இவருக்கு கத்தோலிக்க திருச்சபை எச்சரிக்கை விடுத்தும சபை திருப்தி அடைகிற வகையில் விளக்கம் அளிக்கவில்லை என தெரிவித்து அவர் இந்தமாத தொடக்கத்தில் சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
மேலும், அவரை மடத்தில் இருந்து திரும்ப அழைத்துச்செல்லுமாறு அவரது தாயாருக்கு கடிதமும் அனுப்பப்பட்டது. இந்தநிலையிலேயே அவர் தன்னை சபையில் இருந்து வெளியேற்றும் முடிவை எதிர்த் இவ்வாறு வத்திகானில் மேல்முறையீடு செய்துள்ளார்.
ஜலந்தர் பேராயர் கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தபோது, பேராயருக்கு எதிராக நடந்த போராட்டத்தில் இவர் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது #கேரளா #கன்னியாஸ்திரி #வத்திகானில் #மேல்முறையீடு