இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும்நிலையில் இரு அணிகளின் இரு வீரர்களின் பந்து வீச்சு முறையில் சந்தேகம் எழுந்துள்ளதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது.
இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளர் அகில தனஞ்சய மற்றும் நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் ஆகியோரின் பந்து வீச்சு முறைகளிலேயே இவ்வாறு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது.
இருவரது பந்து வீச்சு முறைமை தொடர்பான நடுவர்களின் அறிக்கை இரு அணிகளின் முகாமையாளரிடமும் சமர்ப்பித்துள்ள நிலையிலேயே இவ்வாறு பந்து வீச்சு முறையில் சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் நடைபெறும் போட்டித் தொடர்களில் இருவரும் பந்து வீச முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை எதிர்வரும் 14 நாட்களுக்குள் இருவரதும் பந்துவீச்சு முறை தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டுமென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #தனஞ்சய #வில்லியம்சன் #பந்துவீச்சில் #சந்தேகம் #ஐ.சி.சி