உலகம் பிரதான செய்திகள்

ஹொங்கொங் விவகாரம் – உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பிய முகப்புத்தக – டுவிட்டர் கணக்குகள் முடக்கம்:

ஹொங்கொங் விவகாரம் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பிய முகப்புத்தக மற்றும் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

ஹொங்கொங் அரசியல் தொடர்பில் கருத்துக்களைப் பதிவிட்ட 936 கணக்குகளை முடக்கியுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ள அதேவேளை வன்முறைகளைத் தூண்டும் வகையில் பதிவுகளை மேற்கொண்ட 5 கணக்குகள், 3 குழுக்கள் மற்றும் 7 பக்கங்களை முடக்கியுள்ளதாக முகப்புத்தக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சீனநாட்டுப் பிரஜைகளின் கணக்குகளே இவ்வாறு வன்முறையைத் தூண்டிய குற்றச்சாட்டில் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது

ஹொங்கொங்கில் குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்கும் அரசின் சட்ட திருத்தத்துக்கெதிராக கடந்த ஜூன் மாதம் முதல் கடுமையான போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. #ஹொங்கொங் #உண்மை #முகப்புத்தக #டுவிட்டர்  #முடக்கம்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.