யாழ். தீவகம் புங்குடுதீவு பகுதியில் 16 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர் என ஊர்காவற்றுறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தம்மிடம் ஒப்படைக்கப்பட்டனர் எனவும் ஊர்காவற்றுறை காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
சந்தேகநபர்களில் ஒருவர் மன்னார் பேசாலை பகுதியை சேர்ந்தவர். மற்றவர் வவுனியா செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் இன்று காலை கஞ்சா போதைப்பொருளை கடத்திச் செல்ல முற்பட்டபோது புங்குடுதீவு பிள்ளையார் கோவிலுக்கு அருகில் வைத்து கடற்படையின் புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.
சந்தேகநபர்களின் உடைமையில் இருந்து 16 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. கஞ்சாவின் பெறுமதி 40 லட்சம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஊர்காவற்றுறைப் காவல்துறையினர் சந்தேகநபர்களை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். #புங்குடுதீவு #கேரளாகஞ்சா #கைது
மயூரப்பிரியன்