136
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை நீடிக்கும் யோசனை நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்படவுள்ளது. இந்த யோசனை நாடாளுமன்றில் நிறைவேற்றப்படுமாக இருந்தால் செப்டெம்பர் 23ஆம் திகதிவரை விசேட தெரிவுக்குழு செயற்படும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இந்த நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு, கடந்த மே மாதம் 22 ஆம் திகதி நியமிக்கப்பட்டது.
Spread the love