174
இந்திய கிரிக்கெட் முன்னாள் அணித்தலைவர்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோரின் வாழ்க்கை ஏற்கனவே திரைப்படங்களாக வந்தன. கபில்தேவ் உலக கோப்பையை வென்றதை வைத்து ‘83’ என்ற பெயரில் படம் தயாராகிறது. இதுபோல் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை கிரிக்கெட் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் வாழ்க்கையையும் படமாக எடுக்கின்றனர்.
இதில் முரளிதரன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. “முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழராக இருந்தாலும் சிங்களவர்கள் பக்கம் நின்று துரோகம் செய்தார். அவரது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது” என்று கண்டித்தனர்.
இந்த படத்தில் நடிப்பது குறித்து விளக்கம் அளித்து விஜய் சேதுபதி கூறியதாவது:- “நான் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் பார்த்தது இல்லை. முரளிதரனிடமே இதை நேரில் சொன்னேன். இந்த படம் முழுக்க கிரிக்கெட்டை பற்றிய கதை அல்ல. அவரது வாழ்க்கையில் நடந்த முக்கிய விஷயங்கள் படத்தில் இருக்கும். என் மீது அன்பு வைத்துள்ள யாரையும் நான் இழக்க மாட்டேன்.
அதுபோன்ற ஒரு காட்சியும் படத்தில் இருக்காது. என்னை நேசிப்பவர்களை காயப்படுத்தும் சுயநலவாதியாக நான் இருக்க மாட்டேன். அதையும் மீறி யாரையாவது காயப்படுத்தினால் மன்னிப்பு கேட்கவும் தயங்க மாட்டேன்.” இவ்வாறு விஜய் சேதுபதி கூறியுள்ளார். #முரளிதரன் #வாழ்க்கை #கிரிக்கெட் #விஜய் சேதுபதி
Spread the love