163
எழுக தமிழ் 2019, பரப்புரை இன்று வெள்ளிக்கிழமை நல்லூரில் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. எழுக தமிழ் நிகழ்வு அடுத்தமாதம் 16 ஆம் திகதி யாழில் நடைபெறவுள்ள நிலையில் இதற்கான பரப்புரைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது இதற்கமைய நல்லூர்ககந்தன் ஆலய வழிபாடுகளைத் தொடர்ந்து ஆலய முன்றலில் பரப்புரைகளை ஆரம்பித்து வைக்கப்பட்டன. வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சீ.வீ.விக்கினேஸ்வரன் தலமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
Spread the love