யாழ். முகாமையாளர் சம்மேளனம் “சனிக்கிழமை ஆய்வுக் கருத்தரங்கு” எனும் தலைப்பிலான நிகழ்வொன்றை ஆரம்பித்துள்ளது. இதன் ஐந்தாவது நிகழ்வு சனிக்கிழமை(24) முற்பகல்-10 மணி முதல் நல்லூரில் அமைந்துள்ள யூரோவில் மாநாட்டு மண்டபத்தில் கூட்டுறவுத் துறை” எனும் தலைப்பில் நடைபெற்றது.
வடக்கு கிழக்கு மாகாண சபையின் மனித வள மேம்பாடும் அபிவிருத்தியும் பிரிவின் முன்னாள் பிரதிச் செயலாளரும், யாழ்.முகாமையாளர் சம்மேளனத்தின் செயலாளருமான சிவசிதம்பரம் கிருஸ்ணானந்தனின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ். மாவட்டக் கூட்டுறவுச் சபையின் செயலாளர் திருமதி- வேதவல்லி செல்வரட்ணம், யாழ். மாவட்டக் கூட்டுறவுச் சபையின் பணிப்பாளர் எஸ்.முருகேசனார், கால்நடை வைத்தியத் துறையின் வடமாகாணப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி எஸ்.வசீகரன், மூத்த கூட்டுறவாளர் எஸ். கணேசமூர்த்தி, யாழ். மாவட்டக் கூட்டுறவுச் சபையின் தலைவரும், மூத்த கூட்டுறவாளருமான சுந்தரலிங்கம், யாழ்.மாவட்டக் கூட்டுறவுச் சபையின் உபதலைவரும், மூத்த கூட்டுறவாளருமான கந்தையா மகாதேவன், யாழ். மாவட்டக் கூட்டுறவுச் சபையின் மகளிர் குழுத் தலைவியும், பண்டத்தரிப்புச் சிக்கனக் கடன் வழங்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவியுமான திருமதி- ஜெபமணி ஜோசவ் ஆகியோர் கருத்துரைகள் ஆற்றினர்.
அதனைத் தொடர்ந்து திறந்த கலந்துரையாடலும் இடம்பெற்றது. திறந்த கலந்துரையாடலில் பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் ஆ. ந. இராசேந்திரம், இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர் அ. வரதராஜப்பெருமாள், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தேசிய அமைப்பாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம், வடமாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடத் துறைத் தலைவரும், சிரேஷ்ட பேராசிரியருமான இரா.சிவச்சந்திரன், யாழ். முகாமையாளர் சம்மேளனத்தின் இணைப்பாளர் வி. நிரஞ்சன் ஆகியோரும் கலந்து கொண்டு கருத்துக்கள் வழங்கினர்.
மேற்படி கருத்தரங்கு நிகழ்வில் கூட்டுறவுத் துறை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. எங்களுடைய எதிர்காலம் கூட்டுறவுத் துறையிலேயே தங்கியுள்ளது. ஆகவே, கூட்டுறவுத் துறையை வளர்க்க ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமெனவும் வலியுறுத்தப்பட்டது.
Mayurappriyan