ஹொங்கொங் கிரிக்கெட் அணி வீரர்கள் இருவருக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை வாழ்நாள் போட்டித் தடை விதித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் ஒழிப்புச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுக்காகவே இவ்வாறு வாழ்நாள் போட்டித்தடை விதிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இர்பான் அஹமட் மற்றும் நதீம் அஹமட் ஆகியோருக்கே இவ்வாறு தடை விதிக்கப்படுகின்றது.
இதனைத் தவிர, ஹொங்கொங் அணியின் மற்றுமொரு வீரரான ஹஸீப் அம்ஜாட்டுக்கு 5 வருடகால போட்டித்தடையும் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் விதிக்கப்பட்டுள்ளது.
2 வருடங்களுக்குள் ஆட்ட நிர்ணய சதி, ஆட்ட நிர்ணய சதிக்குத் திட்டமிட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது #ஹொங்கொங் #கிரிக்கெட் #வாழ்நாள் #தடை #சர்வதேச கிரிக்கெட் பேரவை