Home இலங்கை DR சின்னையா சிவரூபன் மீதான விசாரணையின் பின், ஆயுதங்கள் மீட்கப்பட்டனவா?

DR சின்னையா சிவரூபன் மீதான விசாரணையின் பின், ஆயுதங்கள் மீட்கப்பட்டனவா?

by admin


பளை காவற்துறைப்  பிரிவுக்குட்பட்ட கரண்டிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த AK 47 வகை துப்பாக்கி ஒன்றும், அதற்கான மெகசின்கள் இரண்டும், அதற்கான தோட்டாக்கள் 120 உம், கைக்குண்டுகள் 11 உம் மற்றும் PE 10 என சந்தேகிக்கும் வெடிபொருட்கள் 10 கிலோவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் தொலைநோக்கு உபகரணம் உட்பட பல்வேறு பொருட்களை  கண்டுபிடித்துள்ளதாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கூறுகின்றனர்.

ஏற்கனவே  கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவின் கட்டுப்பாட்டின்கீழ் யாழ் காவல்  நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More