Home இலங்கையாழ்ப்பாணம் மாநகரை அசுத்தப்படுத்திய குற்றத்து தண்டம் விதிக்கப்பட்டது..

யாழ்ப்பாணம் மாநகரை அசுத்தப்படுத்திய குற்றத்து தண்டம் விதிக்கப்பட்டது..

by admin

பொது இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டி யாழ்ப்பாணம் மாநகரை அசுத்தப்படுத்திய குற்றத்து மூவருக்கு தலா 5 ஆயிரம் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் மாநகரில் பொது இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டிய மூவர், யாழ்ப்பாணம் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் மூவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை முற்படுத்தப்பட்டனர்.

பொது இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டி யாழ்ப்பாணம் மாநகரை அசுத்தப்படுத்தினர் என்ற குற்றச்சாட்டை மூவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் காவற்துறையினர் முன்வைத்தனர். சந்தேகநபர்கள் மூவரும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டனர். வழக்கை விசாரித்த நீதிவான் அந்தோணி சாமி பீற்றர் போல், மூவரையும் எச்சரித்துடன், தலா 5 ஆயிரம் தண்டம் செலுத்துமாறு உத்தரவிட்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More