ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. அமைச்சர் மங்கள சமரவீரவின் கொழும்பு இல்லத்தில் இந்த கலந்துரையாடல் நடைப்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் மங்கள வழங்கிய இராபோசன நிகழ்விலும் அவர்கள் கலந்துக்கொண்டனர். இந்த கலந்துரையாடலில் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹசீம், முன்னாள் தவிசாளர் மலிக்சமர விக்ரம உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மங்களவின் இல்லத்தில் சஜித் தலைமையில் விசேட சந்திப்பு….
181
Spread the love