174இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின், தமிழ்ப் பாடசாலைகள், முன்பள்ளிகளில் கல்வி பயிலும், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களின் எதிர்காலத்த்தை உறுதிப்படுத்தும் நோக்கில் FEED அமைப்பு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் நடவடிக்கைகளுக்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் பாரிய உதவிகளை செய்து வருக்கின்றனர்.
அந்த வகையில் மட்டக்கிளப்பு மாவட்டம் வவுணதீவு, நெடுஞ்சேனை “அகரம் முன்பள்ளி” மாணவர்களுக்கு,நெடுந்தீவு ஒன்றியத்தின் ஐக்கியராச்சிய தலைவர் கந்தையா புண்ணியமூர்த்தி, 70 யிரம் ரூபாய் (மாணவர்களுக்கான சத்துணவு,சீருடைகள், கற்றல் உபகரணங்கள்) தனது தனிப்பபட்ட நிதிஊடாக வழங்கியுள்ளதுடன் ஒவ்வொரு ஆண்டும் இதற்கான செலவை பொறுப்பேற்றும் உள்ளார்.