அமெரிக்காவின் FBI உள்ளிட்ட ஏனைய புலனாய்வு நிறுவனங்கள் உரிய அங்கீகாரத்துடனேயே இலங்கைக்குள் பிரவேசித்ததாக காவற்துறை ஊடகப் பேச்சாளர், காவற்துறை அத்தியட்சகர் றுவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே இந்த நிறுவனங்களின் அதிகாரிகள் இலங்கைக்கு சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விசாரணைகளின் போது தடய மாதிரிகளை அவர்கள் பெற்றிருந்தால் அது சட்டரீதியான முறைகளுக்கு அமைவாகவே பெற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாகவே தடய மாதிரிகள் FBI அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன.
இதனால், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைக்கு எந்த தடையும் ஏற்படவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், காவற்துறை அத்தியட்சகர் றுவான் குணசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)