142
தொடர்ச்சியான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் அனைவரும் தமது வாக்குரிமையை பாதுகாத்துக் கொள்வதற்கு முன்வர வேண்டும் என்று யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாக்களிக்கும் உரிமை உடைய ஏராளமானவர்கள் தமது பதிவுகளை இதுவரையில் மேற்கொள்ளாமல் உள்ளமை தேர்தல் அலுவலகர்கள் நடத்திய ஆராய்வுகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே திருத்தம் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள தேருநர் இடாப்பு தொடர்பான உரிமைக் கோரிக்கைகளை எதிர்வரும் 19 ஆம் திகதிவரைக்குள் சமர்ப்பிக்குமாறும் அவர் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு தேருநர் இடாப்பிலுள்ள பெயர்களுக்கு மேலதிகமாக சேர்க்கப்பட வேண்டியவர்களது பெயர்களும், அவ்வாண்டு தேருநர் இடாப்பில் இருந்து நீக்கப்பட்டவர்களுடைய பெயர்கள் அடங்கிய விபரப் பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த மாதம் 23 ஆம் திகதியில் இருந்து கிராம சேவகர் அலுவலகம், பிரதேச செயலகம் மற்றும் தேர்தல் அலுவலகத்தில் இவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ள விபரப்பட்டியலை பரிசீலனை செய்து அதில் புதிதாக சேர்க்கப்பட வேண்டியவர்கள் தமது உரிமை கோரிக்கைகளை சமர்ப்பிக்க முடியும்.
இந்த உரிமை கோரிக்கையை தனக்காகவும், வேறு ஒருவருக்காக அவருடைய உறவினர்களும் எதிர்வரும் 19 ஆம் திகதிகரைக்கும் சமர்ப்பிக்க முடியும்.
குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்களுக்கு இலங்கை கடவுச்சீட்டு இருக்குமாக இருந்தால், அவருடைய உறவினர்களும் இந்த உரிமை கோரிக்கையினை சமர்ப்பிக்க முடியும்.
வாக்களிக்க தகுதியுடையவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த உரிமைக் கோரிக்கையினை இதுவரையில் சமர்ப்பிக்காமல் உள்ளமை தேர்தல் அலுவலகர்கள் நடத்திய ஆராய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வாக்களிக்கும் உரிமையை பாதுகாத்துக் கொள்வதற்காக இந்த உரிமை கோரிக்கைகளினை மக்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். #வாக்குரிமை #பாதுகாக்க #அமல்ராஜ்
மயூரப்பிரியன்
Spread the love