முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ‘சந்தோச கிராமம்’ எனும் வேலைத்திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை(3) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
-முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் பொது சுகாதார வைத்திய அதிகாரி வி.டிலக்சன் தலைமையில் முசலி பிரதேச மேற்பார்வை குடும்பநல உத்தியோகத்தர் ச.பேபிமலர் இன் பங்கு பற்றுதலுடன் ஹீனைஸ் நகர் கிராமத்தில் வைபவரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதன் தலைவர் ஏ.ஜே.எம்.முஸம்மில் , செயலாளர் எம்.ஏ.சி.றைஹானா உட்பட அங்கத்தவர்களான றிஸ்மியா, றிப்கான், சமீம், அஹீதார், நஸீம், மைசூக், அஸ்மின், முர்சித் ஆகியோருடன் முள்ளிக்குளம் பொது சுகாதார வைத்திய அதிகாரி வி.டிலக்சன் மற்றும் முசலி பிரதேச மேற்பார்வை குடும்பநல உத்தியோகத்தர் ச.பேபிமலர் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. #முசலியில் #சந்தோச கிராமம் #வேலைத்திட்டம்
-லம்பேர்ட்