அம்பாறை மாவட்டம் கல்முனை சாய்ந்தமருதில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் தற்கொலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட வீட்டினை இரு நாட்களாக பாதுகாப்பு தரப்பினர் தேடுதல் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை(4) முதல் விசேட தகவல் ஒன்றினை பெற்ற பின்னர் சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் உள்ள குறித்த வீட்டின் நிலத்தினை மண்வெட்டி அலவாங்கு ஸ்கேனர் கொண்டு தோண்டி சோதனை மேற்கொண்டனர். இதன் போது குறித்த வீட்டின் காணியில் புதைக்கப்பட்ட நிலையில் பென் ரைவ் மற்றும் டெப் சேதமடைந்த நிலையில் மீட்டுள்ளனர்.
இச்சோதனை மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் தற்கொலை தாக்குதல் ஏப்ரல் 21 மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரிகள் பயன்படுத்திய தொலைபேசி தரவுகள் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.