148
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவை எதிர்வரும் 20 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்கவுள்ளார். எதிர்வரும் 20 ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தின் நாடாளுமன்ற மன்ற விசேட தெரிவுக் குழு உறுப்பினர்களை சந்திக்க தான் தயாராக உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எழுத்து மூலம் அறிவித்துள்ளார். அதன்படி, அன்றைய தினம் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாட நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழு உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.
Spread the love