156
அம்பாறை காவற்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜமாதே மில்லது இப்ராஹிம் அமைப்பின் 11 உறுப்பினர்கள் மேலதிக விசாரணைக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நேற்று குறித்த நபர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். அரச புலனாய்வு பிரிவு தகவல் வழங்கியதை அடுத்து அம்பாறை காவற்துறை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.
Spread the love