ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்ர பெர்னாண்டோவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற் போன சம்பவம் தொடர்பில், எழுத்து மூலம் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அப்போதைய பணிப்பாளர் பிரதிக் காவல்துறைமா அதிபர் அனுர சேனநாயக்கவுக்கு 2009 மே 27 ஆம் திகதி கிடைத்த உண்மை தகவல்கள் மறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டின் பின்னணியில் ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்ர பெர்னாண்டோ உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் இன்று அவரிடம் இவ்வாறு ஐந்து மணிநேரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனாகொட புலனாய்வுத்துறையினரின் விசாரணைகளின் போது வெளிப்படுத்திய தகவல்களை மையபப்டுத்தி, கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்கவிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட விசேட உத்தரவுக்கமைய இன்று சவேந்ர பெர்னாண்டோவிடம் இவ்வாறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #கொழும்பில் #இளைஞர்கள் #கடத்தப்பட்டு #காணாமல்போனமை #சவேந்ர பெர்னாண்டோ #விசாரணை