Home பிரதான செய்திகள் ஸ்டீவ் ஸ்மித் இன்சமாமின் சாதனையை முறியடித்துள்ளார்

ஸ்டீவ் ஸ்மித் இன்சமாமின் சாதனையை முறியடித்துள்ளார்

by admin


ஒரு அணிக்கு எதிராக அதிக அரை சதம் அடித்திருந்த பாகிஸ்தான் வீரர் இன்சமாமின் சாதனையை ஆஷஸ் தொடரில் அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார்.

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, இரண்டாம் நாளான நேற்று முதல் இன்னிங்சில் 294 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளதனையடுத்து துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 225 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஸ்டீவ் ஸ்மித் 80 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இதன்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக தொடர்ச்சியாக அதிக முறை அரை சதம் அடித்திருந்த பாகிஸ்தான் வீரர் இன்சமாம் உல் ஹக்கின் சாதனையை முறியடித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக், இங்கிலாந்துக்கு எதிராக 9 அரை சதம் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. ஸ்மித் 10 அரை சதம் அடித்து அந்த சாதனையை முறியடித்துள்ளார்.  #ஸ்டீவ் ஸ்மித்  #ஆஷஸ் #இன்சமாம்  #சாதனை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More