ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து 61 பேர் நீரில் மூழ்கியதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிப்பட்டினத்தில் உள்ள கோதவரி ஆற்றுக்கு இன்று ஏராளமானோர் சுற்றுலா சென்றுள்ளனர். அவ்வாறு சென்றவர்களில் 60க்கும் மேற்பட்டோர் படகில் ஏறி காந்திபோச்சசமா கோயிலில் இருந்து அற்புதமான பாபி கொண்டலு மலைகளை சுற்றி பார்க்க புறப்பட்டு சென்றுள்ளனர். ஆற்றின் நடுவில் படகு சென்று கொண்டிருந்த போது எடை தாங்காமல் திடீரென படகு கவிழ்ந்துள்ளது. இந்தக் கோரவிபத்தில் படகில் இருந்த 61க்கு மேற்பட்டோர் நீரில் மூழ்கியுள்ளனர்.
இதனையடுத்து மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆற்றில் குதித்து நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் இறங்கி உள்ளனர். இதேபோல் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 60 பேர் இரண்டு பிரிவாக மீட்பு பணியில் இறங்கி உள்ளனர். இதில் 25 பேரை இதுவரை மீட்டுள்ளனர். எஞ்சியோரை மீட்கும் பணி தொடர்வதாக தெரிவிக்கப்பட்டள்ளது.