பிரதான செய்திகள் விளையாட்டு

ஆஷஸ் போட்டி – கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி – தொடர் சமன்

ஆஷஸ் போட்டியின் இறுதி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அவுஸ்திரேலியாவினை வெற்றி பெற்று தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்துது.

இங்கிலாந்து – அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் கடந்த 12-திகதி ஆரம்பமாகியிருந்தது.
இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 294 ஓட்டங்களும் அவுஸ்திரேலியா 225 ஓட்டங்களும் எடுத்திருந்த நிலையில் 69 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி 3-வது நாள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 313 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இதனையடுத்து 4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி எஞ்சிய இரு விக்கெட்டையும் இழந்து 329 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது.

இதன் மூலம் அவுஸ்திரேலிய அணிக்கு 399 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அவுஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 77 ஓவர்களில் 263 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதன் மூலம் இங்கிலாந்து அணி 135 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இங்கிலாந்து 2-2 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ஆட்டநாயகன் விருதையும், பென் ஸ்டோக்ஸ்  , ஸ்டீவன் சுமித் ஆகியோர் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.  #ஆஷஸ்   #இங்கிலாந்து  #சமன் #அவுஸ்திரேலியா

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.