182
2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்றையதினம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. காலை 9 மணி முதல் 11 வரையான காலப்பகுதியில் வேட்பாளர் மனுத்தாக்கல் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, வேட்பாளர் கட்டுப்பணம் நாளை முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06 திகதி மதியம் 12.00 மணி வரை கையேற்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. #ஜனாதிபதி #தேர்தல் #வர்த்தமானி #வெளியீடு
Spread the love