மன்னார் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தாழ்வுபாடு ‘புனித சூசையப்பர் வாசாப்பு’ நிகழ்வு தாழ்வுபாடு பங்குத்தந்தை அருட்தந்தை பிலிப்புப்பிள்ளை ஜேசுராஜா ஏற்பாட்டில் அன்னாவியார் கிறிஸ்ரியன் டயஸ் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை (20) மாலை 6 மணிக்கு புனித வளனார் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது.
சுமார் 100 வருடங்களுக்கு முற்பட்ட தென்மோடிக் கூத்தை உள்ளடக்கிய வாசாப்பு நிகழ்வானது கடந்த 4 வருடங்களின் பின்னர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு தாழ்வுபாட்டு பங்கு மக்களினால் நடத்தப்பட்டது…
குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை,சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உள்ளிட்டோர் கலந்துகொண்டதோடு, தாழ்வுபாட்டு கிராம மக்களும் கலந்து கொண்டிருந்தனர். இந்த வாசாப்பு நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வு இன்று சனிக்கிழமை (21) இரவு இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர்
21.09.2019