முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, பாஜகவின் ராஜ்யசபா உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி, பாஜக தேசிய செயலாளர் ராம் மாதவ் முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இலங்கைக்கு கடந்த சில வாரங்களாக இந்திய அரசியல் தலைவர்கள் தொடர்ந்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மகள் திருமணத்தில் பங்கேற்க திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் கொழும்பு சென்றிருந்தனர். பின்னர் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து தமிழக மீனவர் பிரச்சனை உள்ளிட்டவை குறித்து விவாதித்தனர்.
இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் திருமணம் கொழும்பில் நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் தேவ கவுடா, பாஜகவின் ராஜ்யசபா உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி, பாஜகவின் தேசிய செயலாளர் ராம் மாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதன்போது செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் 17 பிரிவுகள் இலங்கையில் நன்றாக செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.