சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த இலங்கையர் ஒருவர் காஞ்சிபுரம் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை, மாமல்லபுரம் கிராமத்தில் வசித்து வந்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு இந்தியாவில் தங்கியிருப்பதற்காக செல்லுபடியான வீசா இல்லை என அந்நாட்டு காவற்துறையினர் தெரிவித்தனர். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சட்டவிரோதமாக சென்றுள்ள நிலையில், அங்கு தொழில் புரிந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய ராஜநாயகம் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது….
235
Spread the love