203
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,திருக்கேதீஸ்வரம் வீதியில் சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஒருவரை மன்னார் மாவட்ட ஊழல் ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடற்படை மற்றும் மன்னார் மாவட்ட ஊழல் ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் இணைந்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,திருக்கேதீஸ்வரம் வீதியில் முச்சக்கர வண்டி ஒன்றில் பதுக்கி கொண்டு செல்லப்பட்ட ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
230 கிராம் எடை கொண்ட குறித்த ஐஸ் போதைப்பொருளை கொண்டு சென்ற மன்னாரை சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட குறித்த ஐஸ் போதைப்பொருள் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என தெரிவிக்கப்படுகின்றது. #மன்னார் #மதவாச்சி #போதைப்பொருள் #மீட்பு #கைது
Spread the love