இந்தோனேசியாவில் இன்று காலை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 5.16 மணியளவில் சீரம் பகுதியில் ரிக்டரில் 6.5 அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
அதன்பின்னர் காலை 6.46 மணியளவில் கிழக்கு பகுதியில் உள்ள மலுகு மாகாணத்தில் ரிக்டர் அளவில் 6.8 ஆக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து மீண்டும் காலை 7.39 மணியளவில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தினால் அப்பகுதியில் உள்ள சில கட்டிடங்கள் மற்றும் வீதிகளில் பிளவு ஏற்பட்டுள்ளது எனவும் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை எனவும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் பேரிடர் மேலாண்மை நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்#இந்தோனேசியா #நிலநடுக்கம்