168
யாழ் – அளவெட்டியைச் சேர்ந்த இரு 12 வயதுச் சிறுவர்களை கடந்த இரு நாட்களாக காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த இரு சிறுவர்களும் கடந்த வியாழக்கிழமை காலை வீட்டிலிருந்து புறப்பட்ட நிலையிலேயே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இவர்களில் ஒருவர் மன்னாரைச் சேர்ந்தவர் எனவும் அவர் உறவினர் வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்று வந்துள்ளார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை மன்னாரைச் சேர்ந்த சிறுவன் மற்றைய சிறுவனையும் அழைத்துக் கொண்டு தனது சொந்தக் கிராமமான தலைமன்னாருக்குச் சென்றிருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது #அளவெட்டி #சிறுவர்களை #காணவில்லை
Spread the love