142
ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்களும் இன்று (30.09.19) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கட்சி தலைமையகமான சிறிகொத்தாவிற்கு இவர்கள் இன்று காலை 10.30 க்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும், அதற்கு இணைவாக முன்னெடுக்கப்படவுள்ள பிரச்சார செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்துவதே இன்றைய சந்திப்பின் நோக்கமாகும்.
இந்த கலந்துரையாடல் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது. இதில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
Spread the love