மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கினால் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ‘மன்னார் பிறீமியர் லீக் ‘ என்னும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியானது நடாத்தப்படவுள்ள நிலையில் 8 அணிகளில் 5 அணிகள் உரிமையாளர்களினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக் செயலாளர் ப.ஞானராஜ் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
இலங்கையில் உதை பந்தாட்டத்தில் தலை சிறந்து மிளிர்ந்து கொண்டிருக்கும் மன்னார் வீரர்களின் உதைபந்தாட்ட திறனை மேலும் விருத்தி செய்யும் நோக்கில் இச்சுற்றுப்போட்டியை மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக் ஒழுங்குசெய்துள்ளது.
இச்சுற்றுப்போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளை கொள்வனவு செய்யவுள்ள அணி உரிமையாளர்களுக்கான ஒன்று கூடல் ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் லீக் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் நடை பெற்றது.
இச் சுற்றுப்போட்டியில் கலந்து கொள்ளவுள்ள 8 அணிகளில் 05 அணிகள் உரிமையாளர்களால் கொள்வனவு செய்யப்பட்டது. மிகுதியாகவுள்ள 3 அணிகளையும் முன்னுரிமையடிப்படையில் கொள்வனவு செய்ய விண்ணப்பிக்கும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும்.
கோள்வனவு செய்யப்பட்ட 5 அணிகளை மன்னார் நெடுங்கண்டலைச் சேர்ந்த வேந்தக்கோன்,மன்னாரைச் சேர்ந்த மதன் இலக்ஸ்ரன்,சாவட்கட்டை சேர்ந்த ஜெயானந்தசீலன் ,பள்ளிமுனைணைச் சேர்ந்த டிலான்,மடு பெரிய பண்டி விரிச்சானை சேர்ந்த பிறிற்றோ லெம்பேட் ஆகியோர் கொள்வனவு செய்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இசு;சுற்றுப்போட்டியில் பங்குபற்றலாம்.வீரர்களின் கொள்வனவு மற்றும் போட்டி விதிகள் தொடர்பாக எதிர்வரும் 20 ஆம் திகதி (20.10.2019) காலை 11 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் நடை பெறவுள்ள 2ஆம் கட்ட அணி உரிமையாளர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.