154
மயூரப்பிரியன்
வீரகேசரி பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் அப்பத்திரிக்கையின் யாழ்.பிராந்திய அலுவலக செய்தியாளர் தி,சோபிதனிடம் கொழும்பு காவல் தலைமையகத்திற்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு காவல்துறை தலைமையகத்திற்கு இன்று விசாரணைக்கு சமூகமளிக்குமாறு காவல் தலைமையகத்தில் இருந்து ஊடகவியலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கோட்டாபய ராஜபக்சேவுடன் டக்ளஸ் , வரதர் தரப்புக்கள் இணைந்து தமிழ் மக்களை மேலும் நசுக்க கங்கணம் கட்டியுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்க தலைவி மரிய சுரேஷ் ஈஸ்வரி யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை தொடர்பிலான செய்தி வெளியாகியமை தொடர்பிலையே அவரிடம் சுமார் இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இதேவேளை குறித்த ஊடகவியலாளர. கடந்த 2 மாதமாக விபத்து ஒன்றில் சிக்கி நடக்க முடியாத நிலையில் இந்த விசாரணையை யாழ்ப்பாணத்திற்கு மாற்றி தருமாறு பொலிச் தலைமையகத்தை கோரிய போதிலும் அது நிராகரிக்கப்பட்டது.
விசாரணை திகதியில் மாற்றம் செய்யலாம் ஆனால் விசாரணைக்கு கொழும்பு தலைமையகத்திற்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறான நிலையிலேயே குறித்த ஊடகவியலாளர் தனது சட்டத்தரணியுடன் சென்று விசாரணையை எதிர்கொண்டார். #டக்ளஸ் #விசாரணை
Spread the love