வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட இன்று முதல் 7 நாட்களுக்கு பேரணிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை மீறி பேரணிகள் நடத்தப்பட்டால் நீதிமன்றுக்கு அறிவிக்கும் அதிகாரம் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில், வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் 35 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இரண்டுக்கு எதிர்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளதனையடுத்து அவை இரண்டும் நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நவம்பர் 16ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், அன்றைய தினம் முற்பகல் 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை வாக்களிப்பு இடம்பெறும் எனவும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். #இன்றுமுதல் #பேரணிகள் #தடை