370
மயூரப்பிரியன்
தமிழ் பாரம்பரிய கலைகள் எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு வவுனியாவில் உள்ள தனியார் மண்டபமொன்றில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வவுனியாவை சேர்ந்த அ. நிலா எழுதிய குறித்த நூலினை தமிழியல் வித்தகர் கலாநிதி அகளங்கன் பிரதம விருந்தினராகவும் , வவுனியா தெற்கு பிரதேச சபை செயலாளர் சுகந்தி கிஷோர் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டு நூலினை வெளியிட்டு வைத்தனர்.
அழிந்து வரும் தமிழ் பாரம்பரிய கலைகளை ஆவணப்படுத்தும் நோக்குடனும், அக்கலைகள் தொடர்பில் தற்போதுள்ள சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்குடனேயே இந்நூலினை தொகுத்துள்ளேன். முதல் பாகமாகவே இந்நூலினை தற்போது வெளியிட்டுள்ளேன், மிக விரைவில் அடுத்த பாகத்தினை வெளியீடு செய்வதற்கும் முயற்சிகளை முன்னேடுத்துள்ளேன்.
அழிந்து வரும் கலைகளை ஆவணப்படுத்துவது மாத்திரம் எனது நோக்கில்லை. அழிந்து வரும் கலைகளை அழிவில் இருந்து காப்பதுமே. அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலைஞர்களுடன் உரையாடல்களை தொடங்கியுள்ளேன். என நூலாசிரியரான செல்வி. அ . நிலா தெரிவித்தார். #தமிழ் #பாரம்பரிய #சந்ததியினர் #கலைகள்
Spread the love