மயூரப்பிரியன்
ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது , அங்கிருந்து தப்பி சென்ற இளைஞன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்டையில் குறித்த இளைஞனை கைது செய்தனர்.
கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி ஹெரோயின் போதை பொருளை தமது உடமையில் வைத்திருந்தார் எனும் குற்றசாட்டில் ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
காவல் நிலைய சிறைக்கூட கதவின் பூட்டினை சரியாக காவல்துறையினர் பூட்டததால் , அதனை திறந்து குறித்த நபர் காவல் நிலையத்தில் இருந்து தப்பி சென்று தலைமறைவானார்.
குறித்த சம்பவத்தை அடுத்து ரிசேர்வ் காவல்துறை உத்தியோகஸ்தர்கள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
தப்பி சென்ற நபரை கடந்த இரு வார காலத்திற்கு மேலாக காவல்துறையினர்தேடி வந்த நிலையில் நேற்றைய தினம் காவல்துறையினர்கைது செய்தனர். #ஹெரோயின் #கைது #தப்பி