யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இன்று வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து திறந்து வைத்தனர்.
இதன்மூலம் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இடம்பிடித்தது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள சர்வதேச விமான நிலையம் என்பன முதலிரண்டு இடங்களில் உள்ளன.
திறப்பு விழா நிகழ்வில் அரசு தரப்பினர், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், அதிகாரிகள், முப்படையினர், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு, முதலாவது விமான சேவையாக சென்னை விமான நிலையத்தில் இருந்து அலையன்ஸ் எயர் வந்து தரையிறங்கியது.
எயர் இந்தியாவின் துணை நிறுவனமான, அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் ATR 72-600 விமானமே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் முதலாவதாகத் தரையிறங்கியது.
இந்த விமானத்தில், எயர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அஷ்வானி லொஹானி, அலையன்ஸ் எயர் தலைமை நிறைவேற்று அதிகாரி சுப்பையா, உள்ளிட்ட 30 பேர் வருகை தந்தனர். #யாழ்ப்பாணசர்வதேசவிமானநிலையம் #திறப்புவிழா
படங்கள் இணையம்