இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்ற பேரறிவாளன் , நளினி , முருகன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிப்பதற்கு ஆளுநர் எதிராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழக அமைச்சரவையின் நிலைப்பாட்டை நிராகரித்துள்ள ஆளுனர் ஏழு பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை தெரிவித்த பரிந்துரைகளை ஏற்கவில்லை என அதிகாரபூர்வமற்ற வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அதேவேளை தன்னுடைய முடிவு குறித்து அரசுக்கு ஆளுனர் எழுத்துபூர்வமாக எதையும் இன்னும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது #பேரறிவாளன் #நளினி #முருகன் #ஆளுநர் #எதிர்ப்பு #ராஜீவ்